Breaking News

அரசியல்வாதி கெட்டப்பில் நடிகர் சூர்யா - இணையத்தில் வெளியான புகைப்படங்கள்


தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்பொழுது NGK எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி, ராகுல் பரீத் சிங் என இரு நாயகிகள் நடித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னாள் இப்படத்தின் முதற்பார்வை போஸ்டர்கள் வெளியாகி இருந்த நிலையில், முற்றிலும் புதியதாக புரட்சியாளர் 'சே குவாரா' கெட்டப்பில் தோன்றியிருந்தார் நடிகர் சூர்யா.

இதனால் கண்டிப்பாக மக்கள் புரட்சியை மையப்படுத்திய திரைப்படமாக இது இருக்காலம் என பரவாலாக கருத்து தெரிவிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில் நடிகர் சூர்யா இருக்கும், படப்பிடிப்பு பகுதி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.


 ஏற்கனவே லுங்கி அணிந்து லோக்கல் வாலிபராக சூர்யா தோன்றி இருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது வெள்ளை வேஷ்டி சட்டையில், அரசியல்வாதி போல அவர் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

இதனால் அரசியல் பேசும் படமாக NGK இருக்கலாம் என்று தற்பொழுது பேசப்பட்டு வருகிறது.