Monday, 4 June 2018

தன் ரோல் மாடல் நடிகைகளையே நடுங்க வைத்த 'கீர்த்திசுரேஷ்'


பிரபல மலையாள திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ், 'விக்ரம் பிரபு'வுடன் நடித்த 'இது என்ன மாயம்' எனும் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்.

இந்த ஆண்டு வரை, இவரது நடிப்பை பலர் கேலி செய்தும், விமர்சித்தும் வந்த நிலையில், அண்மையில் வெளியாகி இருந்த 'நடிகையர் திலகம்' திரைப்படம், அந்த இமேஜினை அப்படியே மாற்றி, ஒரு நல்ல நடிகை என்ற பெயரினை கீர்த்தி சுரேஷுக்கு பெற்று கொடுத்திருக்கிறது.


இதனால் மொத்த தமிழ், தெலுங்கு திரையுலகும் பாராட்டி வரும் நிலையில், அவருக்கு ரோல்மாடல் நடிகைகளான, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் திரிஷா ஆகியோர் எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை. 

இதனால் நடிகை கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் மனஉளைச்சலில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் கீர்த்தியினை போட்டியாக பார்க்க ஆரம்பித்து விட்டதாகவும் கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.


ஏற்கனவே சாமி ஸ்கொயர் படத்தில், 'கீர்த்தி சுரேஷிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காரணத்தினால் திரிஷா விலகி இருந்தது, நயனின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், கீர்த்தி 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தில் நடித்தபோது இருவருக்கும் முட்டிக் கொண்டதாக செய்திகள் வெளியானது' போன்றவையும் நாயகிகள் அமைதி காப்பதற்கான காரணமாக கூறப்பட்டு வருகிறது. 

   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();