Friday, 1 June 2018

ரஜினி பற்றிய கருத்து என் வாழ்கையை பாதிக்கிறது..! வீடியோ வெளியிட்ட தூத்துக்குடி இளைஞர்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் அவரது ரசிகர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கும் வேளையில், அவரது பகுதி நேர அரசியலானது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

நடிகர் கமலைப் போல பிரச்சனைகளுக்கு உடனே குரல் கொடுக்காமல், எல்லாம் முடிந்த பிறகு பொறுமையாக அறிவிப்பு வெளியிடுவதால், அப்படியே வெளியிட்டாலும் முன்னுக்கு பின் முரண்பட்டதாகவே இருக்கும் அவரது கருத்துக்கள், ரஜினியின் அரசியல் சாமர்த்தியம் குறித்து மக்களை கேள்வி எழுப்ப செய்திருக்கிறது.


ஸ்டெர்லைட் போராட்ட விஷயத்தில் கூட நடைபெற்ற 100நாட்கள் போராட்டத்தின் போதும் அமைதியாக இருந்து விட்டு, பிரச்சனை பூதாகரமாக வெடித்த பின்னர் தனது கருத்தை தெரிவித்தார்.

அதுவும் மக்கள் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கும் ஆளூம் கட்சியைப் போலவே, பிரச்சனைக்கு சமூக விரோதிகள்தான் காரணம் என சப்பை கட்டு கட்டியது, மக்களை மேலும் கோபமடைய செய்திருக்கிறது.

இதனால் ரஜினியின் மேல் மக்களுக்கு இருந்த கோபம் அனைத்தையும் அவர்களின் சார்பில் மொத்தமாக கொட்டி இருந்தார், தூத்துக்குடியை சார்ந்த சந்தோஸ் என்ற இளைஞர்.

அவர் ரஜினியை பார்த்து 'நீங்கள் யார்' என கேட்கும் காணொளி வைரலானதை தொடர்ந்து, பலர் அந்த வீடியோவை பற்றிய வதந்திகளை கிளப்ப துவங்கி இருப்பதாகவும், அது தன் வாழ்வை பாதிக்க துவங்கி இருப்பதாகவும் அண்மையில் மற்றொரு காணொளியை வெளியிட்டிருக்கிறார் சந்தோஸ்.

'தான் ரஜினியை பார்த்து கேள்வி கேட்டது, பலர் மதிக்கும் இடத்தில் இருக்கும் அவர் ஒருமுறையாவது, ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு குரல் கொடுத்திருந்தால் அதனால் எங்களுக்கு பயங்கர ஆதரவு கிடைத்திருக்கும்' எனவும்,

'அதனாலும், பெரும் அரசியல் புள்ளியாகவும் அவர் மாறி இருப்பதால், அந்த உரிமையுடன்தான் அவரிடம் கேட்டேன். ஆனால் செய்தி ஊடகங்களும் மீம் கிரியேட்டர்களும் அவர்களின் சுயலாபத்துக்காக தவறாக அதனை திசை திருப்புகிறார்கள்' என அந்த வீடியோவில் விளக்கம் அளித்திருந்தார்.  
  

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();