Breaking News

பலரின் பாராட்டை பெற்ற' மெட்ரோ' திரைப்படத்தை டிவியில் ஒளிபரப்ப தடை


கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் மெட்ரோ. அறிமுக நடிகர்களுடன், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம், சமூகத்தில் பெண்களுக்கு பெரிய ஆபத்தாக இருந்துவரும் 'செயின் பறிப்பை' மையமாக கொண்டு உருவாகி இருந்தது.

பாக்ஸ் ஆஃபிசில் தோல்வி அடைந்து இருந்தாலும், மக்களிடம் கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, பிரபல ஆன்லைன் சேனலான 'நெட்ப்ளிக்ஸ்' இந்த திரைப்படத்தினை வாங்கி ஒளிபரப்பி வருகிறது.


இந்நிலையில் மெட்ரோ திரைப்படத்திற்கு சாட்டிலைட் உரிமம் பெற்று, தொலைக்கட்சிகளில் ஒளிபரப்ப அப்படகுழு முயற்சித்த நிலையில், அதற்கான தணிக்கைக் குழு, தடை விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தியேட்டர்களில் வெளியான போதே, 'இந்த படத்தினை பார்த்து பலர் செயின் பறிப்பில் ஈடுபடல்லாம்' என்ற அச்சத்தில், ஏகப்பட்ட காட்சிகள் நீக்கபட்டு இருந்தது. அந்த அளவிற்கு, செயின் பறிப்பை பற்றிய A-Z தகவல்கள் அப்படத்தில் இடம்பெற்றிருந்தது.

இப்படி இருக்கையில்,மேலும் பல காட்சிகள் கத்தரிக்கப்பட்டிருந்தும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப இப்படம் ஏற்றதல்ல என்ற முடிவினை எடுத்திருக்கிறது தணிக்கை குழு.

முன்னதாக இந்த திரைப்படத்தினை பார்த்து ஆர்வக்கோளாரில் பல இளைஞர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு பிடிபட்டு இருந்தனர். இதனால், இப்படத்தை டிவியில் ஒளிபரப்பினால், மேலும் பலரும் தவறான பாதைக்கு செல்லலாம் என்ற அச்சத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கபட்டிருப்பதாகவும் தெரிகிறது.