Breaking News

நான் ஆபாச பட இயக்குனர் இல்லை...! டென்சனான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' சந்தோஸ்


இயக்குனர் சந்தோஸ் P ஜெயக்குமார், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹரஹர மகாதேவகி போன்ற அடல்ட் காமெடி திரைப்பட்டங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர்.

இவரது இந்த இரண்டு படங்கள் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்தாலும், இளையர்களிடம் கிடைத்த ஆதரவால் மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்திருந்தன.   


என்றாலும் அப்படங்களில் நடித்த, நடிகர் கௌதம் கார்த்திக்கிற்கு 'பார்ன் ஸ்டார்' (ஆபாசபட நடிகர்) எனவும், இயக்குனர் சந்தோஸ்ஸிற்கு பிட்டுபட இயக்குனர் என்ற பட்டமும் ரசிகர்களால் சூட்டப்பட்டிருந்தது. போதாக்குறைக்கு அனைத்து செய்திதாள்களும் அவரை, ஆபாச பட இயக்குனர் என்றே குறிப்பிட்டு அவருக்கான ஒரு முத்திரையாகவே அது மாறிப்போனது.

 இந்நிலையில் அவர் கலந்து கொள்ளும் நேர்காணல்கள் அனைத்திலும் 'நான் இயக்கியது ஆபாச படம் இல்லை, அதற்கும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' மாதிரியான அடல்ட் படங்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது' என விளக்கம் அளித்து வந்திருந்தார்.

என்றாலும் அவருக்கு கிடைத்த பட்டம் மாறிய பாடில்லை. இதனால் ஊடகங்கள் மீது ஏக கடுப்பில் இருக்கிறாராம் சந்தோஸ். மேலும் தான் இயக்கி இருக்கும், குடும்ப திரைப்படமான 'கஜினிகாந்'திற்கு, தனக்கு கிடைத்த 'ஆபாச பட இயக்குனர்' பட்டத்தினால், 'குடும்ப ரசிகர்களின் வரவு குறைந்து விடுமோ..?' என்ற அச்சத்திலும் இருக்கின்றாராம் அவர்.