Friday, 1 June 2018

என் படத்திலேயும் அப்படி பண்ணிராதிங்க ப்ளீஸ்..! இசையமைப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்த இயக்குனர்


பிரமாண்ட இயக்குனரான சங்கர் தன் படங்களில் இசையமைப்பிற்காக மலைபோல நம்பி இருப்பது என்றால் அது இசைப்புயல் A.R. ரஹ்மானை தான். ஆனால் ஆச்சர்யப்பட வைக்கும் விதத்தில், இளம் இசையமைப்பாளர்  அனிருத்தை தான் இயக்க இருக்கும் இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் சங்கர்.

அனிருத் இசையில் மிகப் பெரும் ரசிகரான அவர், அதனை பலமுறை தானே தெரிவித்து இருக்கிறார். ஆனால் சில நாட்களுக்கு முன் வெளியாகி மெகா ஹிட் ஆன 'கோலமாவு கோகிலா' திரைபடத்தின் 'கல்யாண வயசு' பாடலும்,  அதற்கு, இசையமைக்காமல் மற்றொருவரின் இசையை வாங்கி, அதில் உபயோகித்திருந்த விசயமும் அனிருத்தின் இசையமைப்பு திறனை கேள்விக்கு ஆளாக்கியது.


இதனால் கலக்கமடைந்த இயக்குனர் சங்கர், 'தயவு செய்து இதே போன்ற ஒரு தவறை தன் படத்தில் செய்துவிட வேண்டாம்' என்ற வேண்டுகோளை அனிருத்திடம் அண்மையில் வைத்திருக்கிறாராம்.

இது போன்ற சர்ச்சையில் இசையமைப்பாளர்கள் சிக்குவது சகஜம்தான் என்றாலும், காப்பியடிக்கப்பட்ட இசையை ஹிட் பாடலாக கொடுப்பதும்  அவ்வளவு சுலபமான காரியம் இல்லை, என்பதும் கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம் தான்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();