Breaking News

இந்த வயசுல இதெல்லாம் தேவையா..? பிக்பாஸ் காயத்ரியை சோதிக்கும் நெட்டிசன்கள்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் எக்கச்சக்க அன்பை பெற்ற ஓவியா போன்ற போட்டியாளர்கள் மத்தியில், காயத்ரி ரகுராம் போன்ற, வெறுப்பை சம்பாதித்த போட்டியாளர்கள் இன்றுவரை கடுமையாக விமர்சித்ததுதான் வருகிறார்கள்.

இயக்குனர் 'சமுத்திரக்கனி' அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெறுப்பை சம்பாதித்த மற்றோரு போட்டியாளரான ஜூலிக்கு, 'கொஞ்ச நாட்கள் அமைதியாக இருங்கள், அதன் பின் மக்கள் தானாக உங்களை மறந்து விடுவார்கள்' என கூறி இருந்த அறிவுரையை,

காயத்ரியும் பின்பற்றி இருந்தால் மக்களின் வெறுப்புகள் அனைத்தும் இந்நேரம் மறைந்திருக்கும் என்ற சூழ்நிலையில்,  'என்னதான் விமர்சித்தாலும் நான் விடமாட்டேன்' என விடாப்படியாக, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு, விமர்சனங்களை நேருக்கு நேர் சந்தித்து வருகிறார்.

இன்றும் இவரது அரசியல் கருத்துக்களுக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், அவர் நாயகியாக நடித்ததை நினைவு கூறும் விதத்தில், கொஞ்சம் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் ஒன்று நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.


சும்மாவே அவரை கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு, இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவார்களா..? அவரது அந்த அழகிய புகைப்படங்களையும் கண்டமேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.