Sunday, 3 June 2018

ரௌடிகளுடன் சண்டையிட்டு, சிறுவனை காப்பாற்றிய அவென்ஜர் சூப்பர் ஹீரோ


நடிகர், நடிகைகள் பலர் தாங்கள் திரைப்படங்களில் தோன்றுவதைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் போராளிகளாகவும், மக்களுக்காக சேவை செய்பவர்களாகவும் இருந்து விடுவதில்லை.

ஆனால் பிரபல ஹாலிவுட் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் 'பெனடிக்ட் கம்பர்பெட்ஜ்' எனும் நடிகர், நிஜ வாழ்விலும் தான் ஒரு சூப்பர் ஹீரோ, என்பதை ஒரு உயிரை காப்பாற்றி நிரூபித்து இருக்கிறார். 

பிரபல மார்வெல் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ஜாக   நடித்து பிரபலமானவர் 'பெனடிக்ட் கம்பர்பெட்ஜ்', இவர் சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


சமீபத்தில் டாக்ஸியில் பயணம் செய்து கொண்டிருந்த இவர், ஒரு இளம் வாலிபர் ரௌடிகள் சிலரால் தாக்கபடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அந்த ரௌடிகள் கண்ணாடி பாட்டிலை கொண்டு வாலிபரை தொடர்ச்சியாக தாக்கி வந்த நிலையில், அவர்களை தானே சென்று தடுத்திருக்கிறார். 

இதனால் அவர்கள், நடிகரையும் தாக்க முற்பட்ட போதும், அவரை தற்காத்து கொண்ட நிலையில் ரௌடிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கின்றனர். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் நடிகரை பாராட்டி வருகின்றனர்.    
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();