Breaking News

மைதான ஊழியர்களுக்கு 'தோனி' செய்த உதவி - 'விக்னேஷ் சிவன்' சொன்னது நடந்துடும் போலேயே..!


சச்சினை அடுத்து இந்திய அளவில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர் என்றால் அது தோனிதான். அதிலும் தமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு அவர் விளையாட ஆரம்பித்தது முதல், தமிழ் நாட்டுக் காரராகவே தமிழ் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறார்.

இவரின் சிறந்த தலைமை பண்பு, எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் பதற்றபடாத தன்மை ஆகியவற்றை, பலர் பார்த்து வியந்து வரும் வேளையில், தமிழ் திரைப்பட இயக்குனரான 'விக்னேஷ் சிவன்', 'தோனி கிரிக்கெட்டோடு நின்று விடாமல் அரசியலும் தன் பங்கை ஆற்ற வேண்டும். ஏன் இந்திய பிரதமராக கூட வரலாம்' என IPL போட்டியில் சென்னை அணியின் வெற்றியின் போது கருத்து தெரிவித்து இருந்தார்.


இதனை பல்வேறு ரசிகர்களும் ஏற்றுக்கொண்டிருந்த நிலையில், புனே கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு அவர் செய்த உதவிகள் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன் படி, IPL போட்டிகளில் சென்னை அணியின் மைதானமாக கருதப்பட்ட 'மகாராஷ்டிரா கிரிக்கெட் கூட்டமைப்பு மைதான' பராமரிப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும், 20,000 ரூபாயை தன் சம்பளத்தில் இருந்து உதவி தொகையாக வழங்கி இருக்கிறார் தோனி.


இதனால் சிறந்த தலைமைபண்புடன் உதவும் குணமும் தோனிக்கு இருப்பதை கண்டு பாராட்டி வரும் ரசிகர்கள், 'விக்னேஷ் சிவன் சொன்னது போலவே அரசியலிலும் தோனி களம் இறங்கி விடுவார் போலேயே' என கருத்து தெரிவித்து வருகின்றனர்.