Breaking News

இணையத்தில் பட்டைய கிளப்பும் 'டான்ஸிங் அங்கிள்' நடன வீடியோ..!


ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது, சூர்யவம்சம் திரைப்படம் போல ஒரே பாடலில் உச்சத்தை தொடுவது என நிஜ வாழ்வில் நடக்காது என கூறப்பட்டு வந்த விஷயங்கள் அனைத்துமே தற்பொழுது இணையத்தின் உதவியால் சாத்தியப்பட்டுதான் உள்ளது. இவற்றிற்கு உதாரணமாக ஜிம்மிக்கி கம்மல் ஷெரில், ஒரு ஆதார் லவ் ப்ரியா பிரகாஸ் வாரியார் ஆகியோரை கூறலாம். 

இவர்கள் இருவரும் ஒரே பாடலில், முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு உச்சத்திற்கு சென்று விட்டனர். இவர்களை தொடர்ந்து வட இந்தியா முழுவதும் பிரபலமாகி வருகிறார், சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா எனும் நபர்.


1987ம் ஆண்டு வெளியான 'குத்கர்ஸ்' (குறிப்பிட்ட திரைப்படமானது தமிழில் ரஜினி நடிக்க அண்ணாமலை எனும் பெயரில் ரீமேக் செய்யபட்டும் இருந்தது.) எனும் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் கோவிந்தா பாடல் என்று அழைக்கப்படும் பாடலுக்கு மிகவும் வித்யாசமான பாணியில் நடனமாடி இருந்தார் சஞ்சீவ்.

அவரின் நடன அசைவுகள் ரசிகர்களுக்கு பிடித்துப் போகவே அனைவருமே அவரைப் போல நடனமாடி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது வீடியோ வைரலானதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த சஞ்சீவ், 'என் காணொளி வைரலானது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நான் கடந்த 1987ம் ஆண்டிலிருந்தே நடனமாடி வருகிறேன். இதனால் மேலும் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன் என பிரபல நாளிதழ் ஒன்றிற்கும் பேட்டி அளித்திருக்கிறார்.