Saturday, 2 June 2018

என் தாத்தா வயது தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார் - நடிகை கஸ்தூரி பகீர் குற்றச்சாட்டு


90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வந்த, நடிகை கஸ்தூரி, தனக்கு சினிமா துறையில் நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி அண்மையில் மனம் திறந்திருக்கிறார். தற்பொழுது இவருக்கு 44வயதான நிலையில், சினிமாவில் குணசித்திர வேடங்களிலும், பாடல்களில் கவர்ச்சி நடனமும் ஆடி வருகிறார்.

இந்நிலையில், அவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில், 'இயக்குனர் ஒருவர் தனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தந்தும்,அதிகம் பாராட்டியும் வந்ததாராம். ஆரம்பத்தில் உண்மையிலேயே தன் திறமைக்காகதான் பாராட்டுகிறார் என்று அவரது நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டராம் கஸ்தூரி.


ஆனால், அவர் கடைசியில் வாய்ப்புகள் வழங்கியதற்காக, படுக்கைக்கு அழைத்து தன்னை அதிர வைத்ததாகவும் தெரிவித்து இருந்தார். இதனால் கோவத்தின் உச்சிக்கே சென்ற கஸ்தூரி, இயக்குனரை கண்டபடி திட்டியதில் அதன் பிறகு அவரிடம் பேசுவதையே நிறுத்தி விட்டாராம்.

மேலும் தன் தாத்தா வயதான தயாரிப்பாளர் ஒருவரும், அந்த தள்ளாத வயதில் வாய்ப்பு தருவதாக கூறி, படுக்கையை பகிர அழைத்திருந்தாராம், அவருக்கும் செம டோஸ் விட்ட கஸ்தூரி, அவரது வயது கருதி போலீசில் புகார் அளிக்காமல் விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இவர்களைப் போன்றவர்கள்தான் தமிழ் சினிமாவுக்கே சாபக்கேடு என்றும், உரிய தண்டனை கிடைத்தால் தான் இவர்கள் அடங்குவார்கள் எனவும் ஆவேசமாக பேசி இருந்தார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();