Breaking News

'விஜய்' பிறந்தநாளுக்கு 'அட்லீ' கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்..!


உச்ச நட்சத்திரமான நடிகர் 'விஜய்' வருகிற ஜூன் 22ம் தேதி, தனது 35வது வயதில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.

அதனை வெகு சிறப்பாக கொண்டாட சென்ற மாதம் முதலே ஆயத்தமாகி விட்டனர் அவரது ரசிகர்கள். மேலும் 1000ம் அடி பிரமாண்ட போஸ்டர் துவங்கி, ட்விட்டரில் பிரத்யேக ஹாஷ்டாக் என தடபுடலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாது, வழக்கம் போல இந்தாண்டும் 'காமன் டிபி' எனும் விஜய் பிறந்தநாள் சிறப்பு புகைப்படம் ஒன்றினையும் வெளியிட இருக்கின்றனர்.

சமூக வலைதளமெங்கும் விஜயின் பிறந்தநாளன்று, ரசிகர்கள் குறிப்பிட்ட புகைப்படத்தினை தங்கள் 'ப்ரோபைல் பிக்ச்சராக' வைத்து மிரட்ட இருக்கும் நிலையில், அந்த புகைப்படத்தினை வெளியிட இருப்பது இயக்குனர் அட்லீ என்பதும் தெரியவந்துள்ளது.


நடிகர் விஜயின் தெறி, மெர்சல் போன்ற திரைப்படங்களை இயக்கியவரான இவர், விஜய் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று வருகிற ஜூன் 17ம் தேதி காமன் டிபியை வெளியிட இருக்கிறார்.