Saturday, 2 June 2018

விபத்தில் பிரபல தொகுப்பாளர் மரணம்..! சோகத்தில் மகனை கொன்ற மனைவி


பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்ட நிலையில், துயரம் தாளாது அவரது மனைவி தங்களது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட துயரமான சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

பிரபல கன்னட டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான சந்தன் என்பவர் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி மீனா கடந்த ஒருவாரமாகவே தீவிர மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி அன்று தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்த அவர், தூங்கிக் கொண்டிருந்த தன் 13 வயது மகனின் கழுத்தை
அறுத்து கொலைசெய்து விட்டு, தானும் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

சந்தன் இறந்த பிறகு, மீனாவையும் அவரது மகனையும் கவனித்து வந்த,  சகோதரர் சுரேஷ் என்பவர், அவர்களது வீட்டிற்கு வந்த போது, தன் இறந்த மகனை கட்டிப் பிடித்துக் கொண்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனாவை பார்த்து அதிர்ந்து மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார். என்றாலும் சிகிச்சை பலனின்றி மீனா மருத்தவமனையில் உயிரிழந்து விட்டார்.

அழகாக இருந்த ஒரு குடும்பம் விதியின் வசத்தால் இப்படியொரு முடிவை சந்தித்ததை கேள்விப்பட்டு, அப்பகுதி மக்களும் சின்னத்திரை பிரபலங்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();