Breaking News

பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திரைப்படத்தில் நடிகர் அஜித்..?


நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து சிவாவின் இயக்கத்திலேயே நடித்து வருகிறார். அடுத்த படம் கண்டிப்பாக வேறொரு இயக்குனருடன்தான் என உறுதியாகி இருக்கும் நிலையில்,

பாகுபலி போன்ற வரலாற்று திரைப்படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு விஸ்வாசம் திரைப்படத்தினை வெளியிட வேண்டும் என்ற நோக்கில்,

மிக வேகமாக முடிவடைந்த முதற்கட்ட படப்பிடிப்புகளை தொடர்ந்து,  சில மாதங்களுக்கு அஜித் பிசியாகவே இருப்பார் எனும் நிலையில், அவரின் அடுத்த படம் குறித்த முடிவினை, விஸ்வாசம் படபிடிப்புகள் முடிந்த பிறகு எடுக்கலாம் என தெரிகிறது.

ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தினை இயக்கிய வினோத் அவர்களோடு அஜித் அடுத்த படத்தில் இணையை அதிக வாய்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில்,


இயக்குனர் விஸ்ணுவர்தனின் படத்தில், அதற்கு அடுத்ததாக அஜித் நடிக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் அந்த திரைப்படம் சோழர்கள் வரலாறு குறித்த கதைக்களத்தை கொண்ட ஒன்று எனவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.