Saturday, 2 June 2018

வீட்ல பெண்குழந்தையை வச்சிக்கிட்டு இப்படியா ஆடுவீங்க..? கஸ்தூரியை வாட்டி எடுத்த நெட்டிசன்கள்


90களின் நாயகியான கஸ்தூரி, தற்பொழுது குணசித்திர வேடங்களில் நடித்து வருவதுடன், சமூக வலைதளங்களில் தனது சர்ச்சை கருத்துக்களால் எப்பொழுதும் பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறார். சமூகத்தில் ஏதேனும் பிரச்சனை எழுந்தால் தவறாது தனது குரலை பதிவு செய்யும் இவருக்கு, ஓரளவு நல்ல மரியாதையும் மக்களிடம் உண்டு.

ஆனால் திரைப்படங்களில் தனது 44வயதிலும் படுகவர்ச்சியான வேடங்களில் நடித்து வருவதால், விமர்சனத்திற்கும் ஆளாகி வருகிறார். இந்நிலையில் நேற்று வெளியான 'தமிழ் படம் 2.0'ன் டீசரில், கஸ்தூரி கவர்ச்சியாக நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.


அதனை பார்த்த இணையவாசிகள் சிலர் 'வீட்டில் மகளை வைத்துக்கொண்டு இப்படி கவர்ச்சியாக நடனமாடுகிறீர்களே?' என கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு தன் வழக்கமான பாணியில் பதில் அளித்திருக்கிறார் கஸ்தூரி.

அதில், "இந்த ஒரு எண்ணத்தைதான் நான் தமிழகம் மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். கவர்ச்சியாக இருப்பது, தாய்மைக்கும், புத்திசாலி தனத்திற்கும் எதிரானதா என்ன? இதே கேள்வியை நீங்கள் நடிகர்களிடம் கேட்பீர்களா..? அவர்களும்தான் தங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு சினிமாவில் மது குடிக்கிறார்கள், நடிகைகளுடன் நடனமாடுகிறார்கள்' என குறிப்பிட்டு இருந்தார். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();