Monday, 4 June 2018

குழந்தை இருந்தால் கவர்ச்சி உடை அணியக்கூடாதா..? விமரச்னங்களுக்கு பதில் அளித்த பிரபல நடிகை


முன்பெல்லாம், இந்திய சினிமாவில் நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலே மார்கெட் போய்விடும் என்றிருந்த நிலைமாறி, திருமணமான பின்னரும் நாயகிகள், சிறிதளவு ரசிகர்களையும் இழக்காது தொடர்ந்து நடித்து வருகின்றனர். 

என்றாலும் அதன் பிறகு, அவர்களின் ஒவ்வொரு செயல்களையும் தொடர்ந்து விமர்சிக்கவும் துவங்கிவிடுகின்றனர் ஒரு தரப்பினர். திருமணமான பின்னர் இப்படி கவர்ச்சி காட்டலாமா..?, பிற நடிகர்களை கட்டி பிடிக்கலாமா, வீட்டில் குழந்தையை வைத்துக்கொண்டு கவர்ச்சி நடனம் ஆடலாமா? என தொடர்ந்து எழும் விமர்சனங்களால், நடிகைகள் சந்திக்கும் டார்ச்சர்கள் ஏராளம்.

அதே போன்ற ஒரு சூழ்நிலையில் சிக்கி தவித்து வருகிறார், பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர். இவர் இந்தியா முழுவதும் வெளியான 'ரா ஒன்' திரைப்படத்தில் சாருக் கான் உடன் நடித்திருந்தவர். 


கடந்த 2012ம் ஆண்டு 'சாயிஃப் அலி கான்' எனும் பாலிவுட் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, கடந்த 2016ம் ஆண்டு ஆண்குழந்தையும் பிறந்தது.

என்றாலும் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வரும் இவரை பார்த்து ரசிகர்கள் பலர், 'குழந்தைக்கு தாயான பிறகு எப்படி கவர்ச்சியாக நடிக்கிறீர்கள்' என விமர்சிக்க ஆரம்பித்தனர். 


இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்திருந்த அவர், 'குழந்தை பெற்ற பின்னர் மாடர்ன் உடைகளை அணிவதில் என்ன தவறு இருக்கிறது? இப்படிப்பட்ட  மன நிலையை ரசிகர்கள் மாற்றிக் கொள்ளவேண்டும்' என காட்டமாகவே கூறி இருந்தார்.     
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();