Saturday, 2 June 2018

ஆமாம் நாங்கள் ஒன்றாக சுற்றினோம் அதற்கென்ன..? நடிகையுடனான காதல் சர்ச்சைக்கு கிரிக்கெட் வீரர் பதில்..!


இந்தாண்டு IPL போட்டிகளில், கவனத்தை ஈர்த்த இளம் வீரர்களில் ஒருவரான 'KL ராகுல்', இந்திய அணியிலும் விளையாடியிருந்த ஒருவர். இவர் பெரும்பாலானா கிரிக்கெட் வீரர்களைப் போல, நடிகை ஒருவரை காதலிப்பதாக, சில நாட்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இது குறித்து பதில் அளித்து இருக்கிறார் 'KL ராகுல்'.

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்த அவர், 'ஒரு ஆணும் பெண்ணும் நட்பாகவே பழக கூடாதா..? ஹிந்தி நடிகையான நிதி அகர்வால் எனது நல்ல தோழி, எங்களுக்குள் நட்பு மட்டுமே இருக்கிறது.

நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தை ஒரே ஊரை சேர்ந்தவர்கள், எங்கள் நட்பு நான் கிரிக்கெட்டில் வெளியே தெரிய ஆரம்பிப்பதற்கும், அவர் நாயகியாவதற்கும் முன்பிருந்தே தொடர்ந்து வருகிறது.

நாங்கள் இருவரும் காதலித்து ஊர் சுற்றுகிறோம் என்றால், எங்களது நண்பர்களும் உடன் வந்திருக்க மாட்டார்கள். எனக்கு நண்பர்களுடன் ஊரு சுற்ற பிடிக்கும் அதைதான் செய்தேன்.     


எங்களுக்குள் கண்டிப்பாக காதல் இல்லை, அப்படி நான் எவரையாவது காதலித்தால் ரகசியமாக வைத்துக்கொள்ளமாட்டேன். அவரை இளவரசியை போல பார்த்துக் கொள்வேன்' என விளக்கம் அளித்திருந்தார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();