Breaking News

'இறப்பதற்கு முன் அவர் சொன்னது அப்படியே பலித்தது' யோகி பாபு வெளியிட்ட தகவல்


நடிகர் யோகிபாபு தான் தற்பொழுது, தமிழ் சினிமாவின் காமெடி சூப்பர் ஸ்டார். அந்த அளவிற்கு மக்களால் இவரின் நக்கல் நையாண்டி பேச்சானது வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து குவியும் நிலையில், தான் பிரபலமாவதற்கு முன், காமெடி நடிகை ஷோபனா தன்னை பற்றி கூறி, அது அப்படியே நிகழ்ந்த சம்பவம் ஒன்றினை நினைவு கூர்ந்து இருக்கிறார்.

பிரபல காமெடி நடிகை ஷோபனா, ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும், சின்னத்திரை காமெடி நிகழ்சிகளிலும் நடித்தவர். இவர் கடந்த 2011ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் நடித்திருந்த 'லொள்ளு சபா' நிகழ்ச்சியில்  துணை இயக்குனராக பணியாற்றினாராம் 'யோகிபாபு'.


ஆரம்பத்தில் இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்த அவரை, லொள்ளு சபா நிகழ்ச்சியின் இயக்குனர் ராம்பாலா, 'உனக்கு காமெடி மூஞ்சி நீ நடிக்க போய்விடு' என அடிக்கடி கிண்டல் செய்து கொண்டிருப்பாராம்.

அதற்கு நடிகை ஷோபனா, 'அவரை கிண்டல் செய்யாதீர்கள். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் ஒருநாள், அவரது கால் சீட் கிடைக்காமல் திண்டாடவீர்கள்' என ராம்பாலாவுக்கு பதில் அளிதிருந்தாராம். அவர் கூறியதைப் போலவே, ராம்பாலாவின் மூன்று படங்களுக்கு யோகிபாபுவின் கால்சீட் கிடைக்காமல் போனதாம். இப்படியொரு நிகழ்வு தன்வாழ்வில் நிகழ்ந்ததை அண்மையில் பகிர்ந்திருந்தார் நடிகர் யோகிபாபு.