Breaking News

பொது இடத்தில் இளைஞருக்கு பளார்..! காம ஆசாமிக்கு நாயகியின் தண்டனை


நாட்டின் பெரும்பாலான துறைகளில் பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் பல ஆண்டுகளாக நடைபெற்றுதான் வருகிறது. ஆனால் இணைய வளர்ச்சியாலும், மக்கள் அனைவரிடமும் செல்போன்கள் வந்துவிட்ட காரணத்தினாலும் நாட்டின் மறுமுனையில் நடைபெறும் குற்றங்கள் கூட மக்களின் கவனத்திற்கு வந்து விடுகிறது.

அதிலும் குறிப்பாக சினிமா நடிகைகளுக்கு நிகழும் போது, அனைவராலும் கவனிக்கப்படும் இடத்தில் அவர்கள் இருக்கும் காரணத்தினால் பெரிய அளவில் பேசப்படும் சமூக பிரச்சனையாகவே மாறி விடுகிறது.

இதனாலேயே தற்பொழுது, பெரும்பாலான சினிமா நடிகைகளை சமூக அக்கறையின் காரணமாக, தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி தெரிவித்து, 'இப்படியும் உங்கள் குழந்தைகள் பாதிக்கப்படலாம். அதனால் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்' என்ற வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 


இந்நிலையில் பிரபல ஹிந்தி பட நடிகையும், ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரம் மூலமாக மொத்த இந்தியாவிற்கும் பரிட்சையப்பட்டவருமான 'யாமி கௌதம்' படப்பிடிப்பில் தனக்கு நிகழ்ந்த பாலியல் குற்றம் குறித்தும், அதனை தான் கையாண்ட விதம் குறித்தும் தெரிவித்து இருக்கிறார்.

ஒருமுறை விளம்பர ஷூட்டிங் ஒன்றில் கலந்து கொண்டதாகவும், அப்போது எங்கிருந்தோ வந்த இளைஞர் ஒருவர் தன் கையை பிடித்து இழுத்ததாகவும், அதனால் ஒரு கணம் கூட யோசிக்காமல், அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.


இதனால் அந்த இடத்தில் கூட்டம் கூடியதால், இளைஞரும் அந்த இடத்தை விட்டு வேகமாக சென்று விட்டதாகவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். பலருக்கு நிகழும் பாலியல் தொல்லைகளுக்கு அவர்கள் பேசாமல் இருப்பதே காரணம், இத்தகையை விஷயங்கள் உடனே பேசப்பட்டு விட்டால்தான் காம ஆசாமிகளுக்கு பயம் வரும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்திருந்தார்.