Breaking News

'பிஜேபி'யை தொடர்ந்து 'அதிமுக'வை நேரடியாக தாக்கும் நடிகர் விஜய் - கசிந்த தகவல்கள்


தளபதி விஜயின் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வெற்றிப்படமாக அமைந்த மெர்சல், இந்தியாவை ஆளும் 'பிஜேபி'யின் 'GST'யை கடுமையாக விமர்சித்து பெரும் பிரச்சனைகளை சந்தித்தது. இதனால் மெர்சல் படத்தில் இடம் பெற்றிருந்த அந்த காட்சிகளை நீக்க கோரி பெரும் அளவில் போராட்டங்கள் வெடித்தது.

ஆனால் அதிர்டவசமாக, இந்த பிரச்சனைகளானது மக்களின் கவனத்தை ஈர்த்து, படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களின் எண்ணிக்கையையும் உயர்த்தியது. இப்படி இருக்கையில் மீண்டும் நடிகர் விஜய், அரசியல் பின்னணி கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் ஒருவராக நடிகர் விஜய் நடித்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்பொழுது அதனை உறுதி படுத்தும் விதத்தில் இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.


குறிப்பிட்ட புகைப்படத்தில், வில்லன்களான பழக்கருப்பையா மற்றும் ராதாரவி ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய கட்சி பேனர்கள், பிரமாண்ட கட் அவுட்கள் இடம்பெற்றிருக்கும் படப்பிடிப்பு பகுதி இடம் பெற்றுள்ளது.

ஆர்ச் வடிவமைப்பு, அதில் இடம் பெற்றுள்ள கட்சியின் பெயர் ஆகியவை, தமிழகத்தை ஆளும் கட்சியான, 'அதிமுக' வை சுட்டிக் காட்டுவது போல உள்ளது. இதனை வைத்து பார்க்கும் போது, விஜய் அதிமுக கட்சியினை வெளுத்து வாங்கலாம் என எதிர்பார்கப்படுகிறது.


ஏற்கனவே விஜயின் படங்கள் என்றாலே பிரச்சனை என்றாகிவிட்ட நிலையில், ஆளும் கட்சியினை பற்றி பேசி இருந்தால் கண்டிப்பாக பிரச்சனைகள் எழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.