Breaking News

கடவுளையே நேரில் சந்தித்தது போல இருந்தது..! நெகிழும் விஜயின் தீவிர ரசிகை


நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும் அவருக்கு பெண்களும் அதிக அளவில் ரசிகைகளாக இருந்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட கேரளாவை சேர்ந்த தீவிர ரசிகை ஒருவர், விஜயை நேரில் சந்தித்து விட்டு அந்த அனுபவத்தை, தன் மிகப்பெரும் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் பேஸ்புக் பதிவாக வெளியிட்டிருந்தார்.


விஜயை பார்த்த அந்த தருணத்தில் அவரின் அனுபவம் எப்படி இருந்தது என்பதனை, அந்த பதிவை படித்த உடனேயே அவர் இடத்தில் இருந்து உணர முடிந்த காரணத்தினால் மிகப்பெரிய அளவில் விஜய் ரசிகர்களிடையே பேசப்பட்டார் தீவிர ரசிகையான சரண்யா விகாஸ்.

இதனால் கிடைத்த பிரபலத்தால் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவர், நடிகர் விஜயை பார்த்தது கடவுளைப் பார்த்தது போல இருந்ததாக தெரிவித்திருந்தார்.

மேலும் சிறிய வயதில் இருந்த தான் பார்த்து வியந்த ஒருவரை சந்தித்த அந்த தருணத்தை தன் வாழ்நாளில் மறக்கவே முடியாது எனவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.