Breaking News

தம்பிராமையாவிற்கு உதவிகரம் நீட்டும் சிவகார்த்திகேயன்


தமிழ் சினிமாவின் பிரபல குணசித்திர மற்றும் காமெடி நடிகரான தம்பி ராமையா 'மலபார் போலிஸ்' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிப்பு மட்டுமல்லாது 'இந்திர லோகத்தில் நா.அழகப்பன்' போன்ற திரைப்படங்களையும் இயக்கி இருக்கும் இவர், தன் மகன் நாயகனாக அறிமுகமாக இருக்கும் திரைப்படத்தையும் இயக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இயக்கம் மட்டுமல்லாது, தயாரிப்பு, இசை, கதை என பல்வேறு அவதாரங்களையும் தனது மகன் உமாபதிக்காக எடுத்திருக்கிறார் தம்பிராமையா.

மணியார் குடும்பம் என பெயரிடப்பட்டுள்ள குறிப்பிட்ட திரைப்படத்தின் முதற்கட்ட போஸ்டர் விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை முன்னணி நாயகன் சிவகார்த்திகேயன் வெளியிட இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது.


இந்தப் படத்தின் நாயகன் உமாபதி, இதற்கு முன் 'அதாகப்பட்டது மகா ஜனங்களே' எனும் திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகி இருந்தார்.  சென்ற வருடம் வெளியாகி இருந்த இந்த திரைப்படம், நடுத்தர விமரசனங்களை பெற்றிருந்தாலும், வசூல் அடிப்படையில் தோல்விப்படமாக அமைந்திருந்தது.


இந்நிலையில், மகனுக்கு ஒரு நல்ல திருப்பத்தை சினிமா துறையில் ஏற்படுத்திக் கொடுக்க, தானே களம் இறங்கி இருக்கிறார் நடிகர் தம்பி ராமையா.