Monday, 28 May 2018

எப்படியெல்லாம் படத்திற்கு விளம்பர தேடுறாய்ங்க..! நடிகையை கலாய்க்கும் இணையவாசிகள்


நடிகர் தனுஷின் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை டாப்சீ. என்றாலும் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. இறுதியாக 'வை ராஜா வை' படத்தில் நடித்திருந்த இவர் அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் பாலிவுட் பறந்தார்.

அதிஷ்டவசமாக அங்கே இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெறவே, பாலிவுட் திரையுலகே இவரை தலையில் வைத்து கொண்டாடி வருகிறது. இதனால் தென்னிந்திய சினிமாவில் இருந்து வாய்ப்புகள் வந்தால் கதை கூட கேட்காமல் தட்டிக் களித்து விடுகிறாராம் டாப்சீ.

இந்நிலையில் இவரது நடிப்பில், 'பாவேஸ் ஜோவி சூப்பர் ஹீரோ' எனும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்த படத்திற்கு விளம்பரம் தேடும் விதத்தில், ஹர்ஷவர்தன் கபூர் எனும் நடிகருடன் பைக் பயணம் செய்திருக்கிறார் டாப்சீ.


மக்களோடு மக்களாக பயணித்த அவர்கள், ரசிகர்களுடன் செல்பி எடுப்பது சகஜமாக உரையாடுவது என புது வித விளம்பர யுக்தியை உபயோகித்து இருக்கிறார்கள்.

இதன் மூலம் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் அந்த புகைப்படங்கள் அதிக அளவில் வெளியானதால், பைசா செலவில்லாமல் தங்கள் படத்தினை மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுதியுள்ளனர் அந்த படக்குழுவினர்.


இந்த புதிய முயற்சியினை பலரும் 'என்ன ஒரு புத்திசாலி தனம்' என ஒரு சிலர்
வியந்து பாராட்டினாலும், 'எப்படியெல்லாம் விளம்பரம் தேடிக்கிறாங்க பாருங்க'
எனவும் கலாய்த்து வருகின்றனர் இணைய வாசிகள்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();