Breaking News

'தமிழ் சினிமாவின் அடையாளம்' கருத்து கணிப்பு - விஜயின் அருகில் கூட வராத அஜித்


தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்துடன் வளம் வரும் இரு பெரும் நடிகர்கள் என்றால், விஜய் மற்றும் அஜித் தான். அவர்களது படங்கள் ரிலீசாகும் போதும், பிறந்தநாளின் போதும் அமர்களப்படுத்தி ஒரு திருவிழாவைப் போல கொண்டாடும் அளவிற்கு அவர்களுக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இப்படி இருக்கையில், 'தமிழ் சினிமாவின் அடையாளம் யார்' என்கிற கருத்துக்கணிப்பு பிரபல பொழுதுபோக்கு இணையதளத்தால் சமீபத்தில் நடத்தப்பட்டது. விஜய், அஜித், சிம்பு, சூர்யா, கமல், ரஜினி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் இதில் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

கிட்டத்தட்ட 2,00,000 ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த கருத்துக்கணிப்பில்  1,07,000 வாக்குகளை நடிகர் விஜயே பெற்று, தமிழ் சினிமாவின் அடையாளம் என்ற பட்டத்தினை பெற்றிருக்கிறார்.


மற்றொரு பெரிய நடிகரான அஜித்தோ, வெறும் 30,000 வாக்குகளை மட்டுமே பெற்று இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். 8000 வாக்குகளுடன் சிம்பு மூன்றாவது இடத்திலும், 5000 வாக்குகளுடன் சூர்யா நான்காவது இடத்திலும், 4000 வாக்குகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஐந்தாவது இடத்தையும் பெற்றிருக்கின்றனர்.