Thursday, 31 May 2018

சமூக வலைதளங்களிலும் பாலியல் தொல்லைகளை சந்திக்கிறேன் - கதறும் நடிகை


பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், 'சமூக வலைதளங்களிலும் தான் பாலியல் தொல்லைகளுக்கு  ஆளானதாக' நடிகை 'ஸ்வரா பாஸ்கர்' தெரிவித்து இருக்கிறார். 

சினிமா துறையில் நடிகைகள் அதிக அளவில் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாவதாக பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், சமூக வலைதளங்களிலும் தாங்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், கொலை மிரட்டல்கள் குறித்தும் நடிகைகள் பேச துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல ஹிந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர், பெண்கள் உரிமை குறித்து கருத்து தெரிவித்ததற்காக, கற்பழிப்பு மிரட்டல்களை பலர் விடுப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.


இது குறித்து அண்மையில் பேசி இருந்த அவர், "திரைப்படங்களில் பெண்களுக்கெதிரான வன்முறையை தூண்டும், இழிவுபடுத்தும் காட்சிகளுக்கு தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறேன். இதனால் பலர் 'நீ கற்பிழக்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை' என சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுக்கின்றனர்.


அவர்கள் குறித்து புகார் தெரிவிக்க போனால், 'உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை, ஒதுங்கிப் போ' என கண்டுகொள்ள மறுக்கிறார்கள். இது போன்ற ஆன்லைன் பாலியல் தொல்லைகளுக்கு முடிவு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என  தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.



Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();