Breaking News

அண்ணன் தம்பிக்கு இடையே இருக்கும் ஹீரோயின் ஒற்றுமை..!


தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக திகழும் சகோதரர்கள், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்களுக்கு அப்படி என்ன ஒரு போட்டியோ தெரியவில்லை, தொடர்ந்து ஒருவருடன் நடித்த நாயகியை உடனே மற்றொருவரும் தன் படங்களில் நாயகி ஆக்கிக் கொள்கின்றனர்.

தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் NGK திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யாவுக்கு ஜோடியாக, நடிகை ராகுல் பரீத் சிங் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிகர் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர்.


இந்நிலையில், கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் 37வது திரைப்பட நாயகி குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது, எதிர்பார்த்தபடி அந்த திரைப்படத்திலும், தற்பொழுது கார்த்தியின் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஒருவரே நாயகியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.


 அதன் படி சமீபத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்த, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் நாயகியான, சாயிசா சாய்கல்தான் சூர்யாவுடனும் அடுத்த படத்தில் ஜோடி சேர இருப்பவர். 

இப்படி 'நீ நடிச்சிட்டியா.. அப்போ நானும் நடிப்பேன்..!' என, அண்ணனும் தம்பியும் போட்டி போட்டு நாயகியை தேர்வு செய்வதைப் போல நினைக்க தோன்றும் இந்த நிகழ்வு ஒன்றும் புதிதாக நிகழ்ந்து விடவில்லை.

அயன் படத்தில் நடித்த தமன்னா கார்த்தியுடன் பையாவிலும்,  கார்த்தியின் நான் மகான் அல்ல நாயகி காஜல், சூர்யாவுடன் மாற்றான் படத்திலும், சிங்கம் படத்தில் நடித்த அனுஷ்கா, கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியனிலும், சூர்யாவின் மாஸ் படத்தில் நடித்த நயன்தாரா, கார்த்தியின் காசஸ்மொராவிலும் என வரிசையாக அவர்கள் படங்களில் சகோதரருடன் நாயகியாக நடித்த ஒருவரையே ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.