Breaking News

கெத்தாக குதிரை ஒட்டிய சன்னி லியோன் - வைரல் வீடியோ


ஆபாச திரையுலகில் அறிமுகமாகி பிரபலமடைந்தவரான சன்னி லியோன், தன் பழைய கால வாழ்கையை மறக்க நினைத்து தற்பொழுது இந்திய சினிமா உலகில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் இங்கேயும் கவர்ச்சி காட்ட மட்டுமே தன்னை உபயோகித்து வந்ததால், செய்வதறியாது தவித்து வந்தார் சன்னி லியோன்.

இந்நிலையில் அவருக்கு தன் வாழ்கையையே மாற்றுவது போன்ற ஒரு திரைப்பட வாய்ப்பு கிடைக்கவே, பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார் அவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் உருவாக இருக்கும் வீரமா தேவி எனும் குறிப்பிட்ட திரைப்படத்தில், சுதந்திர போராட்டதில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணாக நடிக்க இருக்கிறார் சன்னி லியோன்.


இதற்காவே குதிரை ஏற்றம், கத்தி சண்டை போன்றவற்றை முறைப்படி அவர் கற்றார் என்ற செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு பகுதியில், ஒரு தேர்ந்த போர் வீரரைப் போல அவர் குதிரை ஓட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.


அது மட்டுமல்லாது, ஒரு ஆபத்தான காட்சி படமாக்கப்பட்ட போது சுமார் 100 அடி உயரத்தில் தொங்கும் ஸ்டன்ட் ஒன்றை, டூப் போட மறுத்து தானாகவே செய்திருந்தாராம் சன்னி லியோன்.

தன் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் மிகத்தீவிரமாக செய்யப்பட்டு வரும் சன்னி லியோன், தன்னால் முடிந்த அளவையும் தாண்டி இந்த படத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.