Breaking News

மேலும் இரண்டு புதிய சேனல்களை களம் இறக்கும் சன் டிவி


தமிழகத்தின் TRP கிங் சன் டிவி மேலும் இரண்டு புதிய சேனல்களை களம் இறக்க உள்ளது. கலாநிதி மாறனின் 'சன் நெட்வொர்க்' இந்தியாவிலேயே மிகப்பெரும் டிவி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

டிவி தொடர்கள், நாடகங்கள், திரைப்படங்கள், திரைவிமர்சனம், செய்திகள் என மக்களிடம் முதன் முதலாக கொண்டு சென்ற இந்த நிறுவனம், மீடியா துறையில் பல்வேறு டிவி சேனல்களின் முன்னோடியாகவும்  செயல்பட்டு வருகிறது.

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் கால் பதித்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் இந்நிறுவனம், விரைவில் பெங்காளி மற்றும் மராத்தி மொழிகளிலும் சேனல்களை துவங்க இருக்கிறது.

இது குறித்து அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருக்கும் சன் குழுமம், 'சேனல்கள் வெளியிடும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, இருந்தாலும் அதற்கான பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு IPLல் எங்களது சன்ரைசர்ஸ் அணி, இரண்டாம் இடம் பிடித்திருப்பதும் எங்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது' எனவும் குறிப்பிட்டுள்ளது.


ஏற்கனவே இந்த குழுமத்திற்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 23 சேனல்கள் இருப்பதும், அதன் மூலம் தினமும் கோடி கண்ணக்கில் வருவாய் ஈட்டுவதும் குறிப்பிடத்தக்கது.