Tuesday, 29 May 2018

தமிழ மக்கள் செய்ய தவறியதை செய்த சிம்பு..! குவியும் பாராட்டுகள்


நடிகர் சிம்பு சர்ச்சை நடிகர் என்று முன்பு அழைக்கப்பட்டு வந்தாலும், தற்பொழுது அவற்றை பொய்யாக்கும் விதத்தில், மனதளவிலும் உடலளவிலும் முற்றிலும் புதிய மனிதராக மாறி நிற்கிறார்.

சினிமாவில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் மக்களுக்கு குரல் கொடுத்து வரும் இவர், தமிழக மக்களின் சார்பில் செய்த காரியம் ஒன்று வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாகவே தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டம், சென்ற வாரம் போராட்டமாக வெடித்ததை தொடர்ந்து, 13 அப்பாவி மக்கள் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்.


உலகை உலுக்கிய இந்த சம்பவத்தால், உலகெங்கும் இருக்கும் தமிழர்களும் அந்த அந்த நாடுகளில் போராட்டங்களை நடத்தினார்கள்.

குறிப்பாக லண்டன் வாழ் தமிழர்கள் சிலர், ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வாலின் வீட்டிற்கு முன் போராடி, பல உலகளாவிய மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தனர். இப்படி பெரிய அளவில் போராட்டம் பேசப்படுவதற்கு காரணமாக இருந்த லண்டன் வாழ் தமிழர்களுக்கு, நடிகர் சிம்பு தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார்.


சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, தான் ஏன் ஆங்கிலத்தில் பேசினேன் என்ற பலரது கேள்விக்கு பதில் அளித்திருந்த சிம்பு, லண்டன் தமிழர்களின் இந்த செயலை, பலர் மறந்து விட்ட நிலையில் நினைவு கூர்ந்து  பாராட்டி இருந்தார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();