Breaking News

ரஜினியை மறைமுகமாக போட்டுத்தாக்கிய நடிகர் சித்தார்த்


நடிகராக இருந்த இத்தனை வருடங்களில் சந்தித்த விமரசனங்களை விட அதிக அளவில், அரசியலில் களம் இறங்கிய இந்த ஒரு சில மாதங்களிலேயே சந்தித்து விட்டார் ரஜினிகாந்த்.

ஆரம்பத்தில் கருத்தே தெரிவிக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட ரஜினி, 'இதற்கு நீங்கள் சும்மாவே இருந்திருக்கலாம்' என பலர் வருத்தப்படும் அளவில் தூத்துக்குடி போராட்டத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார் ரஜினி.

இதனை சாதாரண மக்கள் முதல் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் வரை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பிரபல நடிகர் சித்தார்த்தும் தன் பங்கிற்கு ரஜினியை தாக்கி பேசி இருக்கிறார்.

முன்னதாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை நேரில் சென்று சந்தித்த ரஜினி, ரசிகர்களிடையே பேசும் போது, 'ஏற்பட்ட கலவரத்திற்கு, போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகளே காரணம்' என கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதளப்பதிவில், 'விட்டால் இவ்வளவு நாட்கள் தூத்துக்குடியில் நிலவிய சுற்று சூழல் மாசுபாட்டிற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என கூறுவார்கள் போல' என்று மறைமுகமாக ரஜினியை தாக்கி பதிவிட்டிருந்தார்.