Tuesday, 29 May 2018

'விஜயகாந்தின்' 40 ஆண்டுகால கலைச்சேவையை பாராட்டி, மகன் கொடுத்த பரிசு


தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகரான விஜயகாந்த் நடிப்பில் இருந்து ஒதுங்கி, தற்பொழுது முழு நேர அரசியலில் ஈடு பட்டு வருகிறார். அண்மையில் இவர் கலைத்துறையில் தனது 40வது ஆண்டினை கொண்டாடி இருந்த வேளையில், அவருக்கு அன்பளிப்பாக ஒரு விஷயத்தை செய்து வியக்க வைத்திருக்கிறார் மகன் சண்முகப் பாண்டியன்.

தன் அப்பாவைப் போலவே பெரிய நடிகனாக வர வேண்டும் என்ற கனவோடு, சகாப்தம் எனும் படத்தில் அறிமுகமான அவருக்கு, சரியான படங்கள் அமையாத காரணத்தினால், இன்னும் வெற்றிப் படங்கள் ஏதும் கொடுக்கவில்லை.


இதற்கு முன் தான் நடித்த, படங்களில் ரசிகர்கள் கூறிய குறைகளை கேட்ட சண்முகப் பாண்டியன், அவற்றை போக்கி ஒரு நல்ல நடிகனாக வரும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக தன் உடல் எடையை குறைத்து, கட்டுமஸ்தான உடலைப் பெற வெளிநாட்டில் தீவிர பயிற்சி செய்து வந்தார் சண்முகப்பாண்டியன்.

அண்மையில் இந்திய திரும்பி இருந்த அவர், தன் தந்தையின்  40வது ஆண்டு கால கலைச்சேவைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில், தனது அன்பு பரிசாக அவரது கண்களையே தன் கைகளில் பச்சை குத்தி இருக்கிறார்.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();