Wednesday, 30 May 2018

யாருதான்பா இவங்க..? சென்னையை சஸ்பென்சில் ஆழ்த்திய சீமான்..!


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தமிழகத்தில் தீவிர அரசியலில் ஈடு பட்டு வருகிறார். ஒவ்வொரு சமூக பிரச்சனைகளின் களத்தில் இறங்கி குரல் கொடுக்கும் இவர், வன்முறையை தூண்டுவதாகவும் ஒரு சிலர் இவர்மீது குற்றச்சாட்டையும்.வைக்கின்றனர்.

சென்னையில் IPL போட்டிகள் நடைபெறுவதை தடுக்க மிகத்தீவிரமாக செயல்பட்ட இவரின் கட்சியினர் போலீசாரை தாக்குவது போன்ற காணொளிகள் வெளியானதே அந்த குற்றச்சாட்டுகளுக்கு காரணமாகவும் அமைந்தது.


இந்நிலையில் சென்னை முழுவதும் சீமானின் கட்சி சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்து ஆரம்பித்துள்ளது. அந்த போஸ்டர்களில்  எங்களை அடக்க நினைப்பது அதிகாரமா? ஆணவமா என்ற வாசகத்தோடு, முக மூடி அணிந்த இளைஞர்களுடன், கம்பீரமாக போஸ் கொடுத்திருக்கிறார் சீமான்.


போதாதைக்கு 'யார் இவர்கள்' என போஸ்டரில் இடம் பெற்றுள்ள இளைஞர்கள் குறித்து சஸ்பென்ஸ் வைத்திருக்கும் வேளையில், இது என்ன சீமானின் புதிய திரைப்படமா? அல்லது வேறேதாவது வில்லங்கமா என  விடையை நோக்கி காத்திருக்கின்றனர் சென்னை வாசிகள்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();