Tuesday, 29 May 2018

நடிகர் 'சூர்யா'வை பார்த்து வாயடைத்து போன சாய்பல்லவி


இந்திய சினிமா துறையே தலையில் வைத்து கொண்டாடிய திரைப்படம் என்றால் அது 'ப்ரேமம்'. அந்த படம் வெளியாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், அதில் நாயகியாக அறிமுகமான சாய் பல்லவி பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ப்ரேமம் படத்திற்கு பின் முன்னணி நடிகைகளுக்கு இணையான வரவேற்பை பெற்ற சாய் பல்லவி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.


இவர் நடிப்பில் தியா எனும் திரைப்படம் அண்மையில் வெளியாகி இருந்த நிலையில், தனுஷுடன் மாரி-2, சூர்யாவுடன் NGK போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் NGK படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவை முதன் முதலில் பார்த்த போது, பள்ளிப்பருவத்திலிருந்தே சூர்யாவின் தீவிர ரசிகையான தான் வியந்துபோய் விட்டதாகவும், அப்பொழுது தனக்கு பேச்சே வரவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். 


மேலும் 'நிஜ வாழ்வில் இயல்பாக இருக்கும் நடிகர் சூர்யா, கேமராவின் முன்னால் வந்து விட்டால் அப்படியே வேறு ஒருவராக மாறி விடுவதாக'வும் சாய் பல்லவி பாராட்டி இருந்தார்.   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();