Breaking News

'கலட்டி விட்ட தமிழ் சினிமா' விட்டதை பிடிக்க நடிகையின் பலே திட்டம்


ஆரம்பத்தில் தோல்விப் படங்களில் நடித்து, தொடர் முயற்சியினால் பின்னர் வெற்றிப்படங்களை கொடுத்து பத்து வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கும் நடிகைகளின் மத்தியில், முதல் படத்திலேயே மெகா ஹிட் வெற்றியை கொடுத்து, பல விருதுகளையும் வென்று இன்று வாய்ப்பே இல்லாமல் வீட்டில் அமர்ந்திர்கிறார் நடிகை ரித்திகா சிங்.

நிஜ வாழ்விலேயே குத்து சண்டை வீராங்கனையான இவர், இறுதி சுற்று திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்திலேயே பல விருதுகளையும் பெற்ற அவர் சிவ லிங்கா, ஆண்டவன் கட்டளை போன்ற தொடர் தோல்விப் படங்களால் தற்பொழுது வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.


வாய்ப்புகள் இல்லையென்றால், ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திடமும் நடிகர்களிடமும் சென்று சிபாரிசு கேட்கும் நடிகைகள் மத்தியில், 'நானே சென்று வாய்ப்பு கேட்கமாட்டேன்' என அடம் பிடித்து கொண்டிருக்கிறார் ரித்திகா.

ஆனால் 'ஆடிய கால்கள் சும்மா இருக்காது' என்பதைப் போல நடிப்பையும் விட மனதில்லாத அவர், உடல் எடையை குறைத்து செம பிட்டாக காட்சியளிக்கிறார். இடையே தன் சிக்ஸ் பேக் புகைப்படத்தையும் வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்த அவர், தொடர்ந்த தன் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.


அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வரும் நிலையில், வாய்ப்புக்கள் தேடி வரும் என்ற நம்பிக்கையிலும் காத்திருக்கிறார்.