Sunday, 27 May 2018

சூர்யா ஒரு ஜென்டில்மேன் - புகழும் நடிகை


தமிழ் சினிமாவில் எந்த வித சர்ச்சைகளிலும், கிசுகிசுக்களிலும் சிக்காத நடிகர் என்றால் சூர்யாவை கூறலாம். அந்த அளவிற்கு தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் அவரை, சக நாயகியான ராகுல் பரீத் சிங் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

சூர்யாவின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தை தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் திரைப்படம் NGK.


பிராமண புரட்சியாளராக சூர்யா நடிக்கும் இந்த படத்தின் போஸ்டர்களே எதிர்பார்ப்பினை தூண்டும் விதத்தில் அமைந்திருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ராகுல் ப்ரீத் சிங், சாய்பல்லவி என இரு ஜோடிகள். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாகி இருந்த நிலையில், சூர்யாவுடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்திருந்தார் ராகுல் பரீத் சிங்.


அதில், 'சூர்யா என்னதான் உச்ச நடிகராக இருந்தாலும், எந்த வித பந்தாவும் காட்டாதவர். அனைவரிடமும் இயல்பாக பழகுவார். படபிடிப்பிற்க்கு நேரத்திற்கு வந்து விடுவார். மொத்தத்தில் அவர் ஒரு ஜென்டில் மேன்.' என புகழ்ந்திருந்தார்.      
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();