Breaking News

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு லட்சங்களில் நிதி உதவி..! மக்களின் மனதை வென்ற ரஜினி


இந்த ஆண்டு அரசியலில் களமிறங்கி இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், 'முழு மனதோடு அரசியலில் ஈடுபடவில்லை. பிரச்சனைகளின் போது கூட குரல் கொடுக்காத இவரா மக்களை காப்பாற்ற போகிறார்' என பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து சந்தித்து வந்தார்.

போதா குறைக்கு ரஜினிக்கு 150 தொகுதிகளில் இருக்கும் செல்வாக்கினை உணர்ந்து ஆளும் கட்சியும் அவரை கடுமையாக விமர்சிக்க துவங்கி இருக்கிறது.


இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை சந்திப்பதற்காக, இன்று தூத்துக்குடி சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

 விமான நிலையத்திலிருந்து தடபுடலான வரவேற்பு கொடுத்த ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில், திறந்தவெளி காரில் ரஜினி பயணித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையை சென்றடைந்தார்.


அங்கே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினி காந்த், நிவாரண உதவிகளையும் வழங்கினார். உயிரிழந்தவர்களின் குடம்பத்திற்கு சுமார் 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வழங்கியதாகவும் ஒரு செய்தி வளம் வர துவங்கி இருக்கிறது.

இப்படி ரஜினிகாந்தின் இந்த திடீர் விசிட் மக்களுக்கு ஆதரவு அளித்ததுடன், ஆட்சியில் இல்லாத அவர் நிதி உதவி செய்தது, தூத்துக்குடி மக்களிடயே அவருக்கான செல்வாக்கையும் அதிகரித்திருப்பதாக தெரிகிறது.


என்றாலும் வழக்கம் போல ஒரு சில விமர்சகர்கள் ரஜினியின் இந்த திடீர் விசிட், விரைவில் வெளியாக இருக்கும் காலா படத்திற்கான விளம்பர நோக்கில் மேற்கொள்ளப்பட்டதெனவும் விமர்சித்து வருகின்றனர்.