Thursday, 31 May 2018

'வாணி ராணி'யை தொடர்ந்து 'ராதிகா' நடிக்க இருக்கும் புதிய டிவி தொடர்..!


80, 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்து வந்த நடிகை ராதிகா, தற்பொழுது குணசித்திர வேடங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். சீரியல் நடிகைகளில் அசைக்க முடியாத ஒருவராக மிகப்பெரும் ரசிகர் கூட்டத்துடன் வலம்வரும் இவர், விரைவில் புதிய டிவி தொடர் ஒன்றில் நடிக்க இருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்பொழுது 'வாணி ராணி' எனும் நெடுந்தொடர் ஒன்றில் இரட்டை வேடங்களில் நடித்து வரும் அவர், விரைவில் 'சந்திரகுமாரி' எனும் வரலாற்று காட்சிகள் நிறைந்த டிவி தொடரிலும் நடிக்க இருக்கிறார்.


வழக்கம் போல இவரது ராடான் மீடியாவொர்க்ஸ் நிறுவனமே இந்த தொடரையும் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ரஜினியின் 'பாட்சா' திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, குறிப்பிட்ட தொடரின் வரலாற்றுக் காட்சிகளை இயக்க இருப்பதாகவும் தெரிகிறது.

திரைப்படங்களுக்கு இணையான தரத்துடன் தற்பொழுது டிவி சீரியல்கள் உருவாக துவங்கியுள்ள நிலையில், ராதிகாவின் அடுத்த தொடர் குறித்த எதிர்பார்ப்பும் சின்னத்திரை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.





Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();