Breaking News

தன்னை விட 10 வயது இளமையான நபரை காதலிக்கும் பிரியங்கா சோப்ரா


காதலுக்கு கண் இல்லை என்று பலர் சொல்ல கேட்டிருப்போம், ஆனால் தற்பொழுது வயதும் இல்லை என்பதனை நிரூபித்து வருகின்றனர் இந்திய சினிமா நடிகைகள்.

முன்னதாக தமிழ், தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்தவரான நடிகை ஸ்ரியா சரண் தன்னை விட 10 வயது கம்மியான ரஸ்ய தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் வெளியிடாமல் இருந்து வருகிறார் ஸ்ரியா.


இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவும், தன்னை விட 10 வயது இளமையான நிக் ஜோனாஸ் எனும் ஹாலிவுட் பாடகரை காதலித்து வரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்பொழுது ஹாலிவுட் திரைப்படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து ஹாலிவுட் நடிகையாகவே மாறிப்போன பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாசுடன் அதிகம் தென்பட்டு வருகிறார்.


இதனால் இவர்களுக்கிடையே காதல் மலர்ந்து விட்டதாக, அமெரிக்க ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. என்றாலும் இதைப்பற்றி கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வரும் ப்ரியாங்கா, ஸ்ரியா போல, ரகசிய திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.