Breaking News

மிரட்டலான பெயரோடு வெளியாகும், 'பிரபாகரன்' வாழ்க்கை வரலாறு திரைப்படம்


இலங்கை தமிழர் பிரச்சனைக்காக போராடி லட்ச கணக்கான அப்பாவி மக்களோடு உயிர் நீத்தவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்.

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பறிபோன, 13 பேரின் உயிர் ஒட்டுமொத்த தமிழகத்தையே கொந்தளிக்க வைத்ததைப் போல, கண் முன்னரே ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதால், ஆயுதமேந்தி இலங்கை அரசை எதிர்த்த இந்த மாவீரனின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக இருக்கிறது.

இதற்கு முன் நீலம், லைட் மேன், உனக்குள் நான் போன்ற படங்களை இயக்கியிருந்த வெங்கடேஷ் குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தினை ஸ்டூடியோ 18 நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.


மேலும் இப்படத்திற்கு 'சீறும் புலிகள்' எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஸ்டூடியோ 18 நிறுவனம் நேற்று வெளியிட்டது. தமிழர்கள் போற்றும் ஒரு மாமனிதர் பிரபாகரன் என்பதால், அவர் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.



அந்த நடிகர் பிரபாகரனின் கதாப்பாத்திரத்தை உள்வாங்கி நடிக்கும் பட்சத்தில், கட்டபொம்மனாக நடிகர் சிவாஜியை பார்த்தது போல, வாழும் பிரபாகரனா அந்த நடிகரும் போற்றப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.