Tuesday, 29 May 2018

நான் இன்னும் வளரனும், அதுவரை இப்படிதான்... வித்யாசமாக சிந்திக்கும் கீர்த்தி சுரேஷ்


என்னதான் கதையம்சமுள்ள படங்களில் நாயகிகள் நடித்தாலும், கவர்ச்சி குறைந்தால் மறந்து விடும் சினிமா உலகம், என்பதனை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் போல கீர்த்தி சுரேஷ்.

நயன்தாரா, திரிஷா என சினிமா துறையில் வெற்றி பெற்ற நாயகிகளை ரோல் மாடலாக எடுத்து பின் தொடர நினைக்கும் கீர்த்தி சுரேஷ், இக்கட்டான சூழ்நிலையில் ஒரு முக்கியமான முடிவையும் தற்பொழுது எடுத்திருக்கிறார்.


சில நாட்களுக்கு முன் இவருக்கு நடிக்கவே தெரியவில்லை என விமர்சித்தவர்கள் கூட, கீர்த்தியை பாராட்டும் அளவிற்கு ஒரு நல்ல இமேஜை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது அண்மையில் வெளிவந்த 'நடிகையர் திலகம்' திரைப்படம்.

என்றாலும் கிடைத்த புகழினை தலையில் ஏற்றிக் கொள்ளாத கீர்த்தி சுரேஷ், 'நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிக்கும் அளவிற்கு தான் இன்னும் வளரவில்லை' என வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.


மேலும் நயன்தாரா, திரிஷா ஆகியோரை போல சில ஆண்டுகள் நாயகனை சுற்றி வந்து நடனமாடி டூயட் பாடும், அழகு பதுமை வேடங்களிலேயே நடிக்க இருப்பதாகவும், கதையம்சமுள்ள படங்களில் நடிப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவையும் இப்பொழுது எடுத்திருக்கிறாராம்.

அதாவது இளமையாக இருக்கும் போதே கவர்ச்சி காட்டி விட்டு, இழுத்து போர்த்தி நடிக்கும் கதையம்சமுள்ள கதாப்பாத்திரங்களை 30 வயதை தாண்டியதும் நடிக்கிறேன் என்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();