Tuesday, 29 May 2018

சூர்யா மகனின் பெயரை தன் படத்திற்கு வைத்த கார்த்தி..?


தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் அண்ணன், தம்பி நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யா. கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தை தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம் எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து உருவாக இருக்கும் அவரது 17வது படத்தின் பெயர் பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தினை தொடர்ந்து இதிலும் நடிகை ராகுல் பரீத் சிங் உடன் ஜோடி சேர இருக்கிறார். இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ராஜாத் ரவி சங்கர் இயக்க இருக்கிறார்.


முழுக்க முழுக்க காதல் காமெடி திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசையமைக்கிறார்.

இப்படி ஒரு ஸ்டைலான காதல் திரைப்படத்திற்கு, தேவ் என்ற ஸ்டைலான பெயரை சூட்ட இருக்கிறதாம் படக்குழு. கார்த்தியின் சகோதரர் சூர்யாவின் மகனின் பெயரும் தேவ் எனும் நிலையில், சட்டென தோன்றிய இந்த பெயரை கார்த்திதான் பரிந்துரைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.     
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();