Breaking News

'ரஜினி மன்னிப்பு கேட்டாலும் ரிலீஸ் ஆகாது' காலா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள்


சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் ரஞ்சித் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் காலா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் ரிலீசாகும் இப்படத்திற்கு, கர்நாடகாவில் எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்துள்ளது.

அடிக்கடி சர்ச்சைகளை செய்து விளம்பரம் தேடும் அரசியல்வாதிகளில் ஒருவரான வட்டாள் நாகராஜ், கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் சம்பந்தபட்ட விசயங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.


பாகுபலி படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசின் போது கூட, காவிரி பிரச்சனைக்கு கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக, 'அவர் மன்னிப்பு கேட்கும் வரை படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம்' என பிரச்னை செய்திருந்தார் வட்டாள் நாகராஜ்.


அதுபோலவே இப்பொழுது காலா பட ரிலீசுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அவர், 'சத்யராஜ் போல ரஜினி மன்னிப்பு கேட்டாலும், காலா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம்' என ஒற்றை காலில் நிற்கிறார்.

இப்படி பிரச்சனைகள் வரும் என்ற காரணத்தினால் தான், காலா திரைப்படம் கர்நாடக தேர்தலுக்கு பின் ரிலீசாக இருக்கும் நிலையில், இப்பொழுதும் பிரச்சனை கிளம்பி இருப்பதால் என்ன செய்வதென்று முழித்துக் கொண்டிருக்கிறதாம் காலா படக்குழு.