Monday, 28 May 2018

'மெர்சல்' போலவே 'காலா'வும் பெறப்போகும் சிறப்பு அங்கீகாரம்


நடிகர் விஜயின் மாபெரும் வெற்றி திரைப்படமான மெர்சல், இணையத்திலும் பல்வேறு சாதனைகளை புரிந்தது. ட்விட்டர், பேஸ்புக், யூட்யூப் என சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்ட இத்திரைப்படத்திற்கு ட்விட்டரின் சார்பாக சிறப்பு ஈமொஜியும் வழங்கப்பட்டிருந்தது.


தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு சமூக வலைத்தள நிறுவனத்திடம் இருந்து இப்படியொரு அங்கீகாரத்தை பெற்ற முதல் திரைப்படமாகவும் மெர்சல் விளங்கியது. இந்நிலையில் இப்படியொரு அங்கீகாரம் ரஜினியின் காலா திரைப்படத்திற்கும் கிடைக்க இருக்கிறது.

ரஞ்சித், ரஜின்காந்த் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி இருக்கும் காலா திரைப்படம் வருகிற, ஜூன் 7ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதனை கொண்டாடும் விதத்தில் காலா படத்திற்காக சிறப்பு ஈமொஜிகள் ட்விட்டரில் இன்று வெளியாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளிலும் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு, குறிப்பிட்ட நான்கு மொழிகளிலும் ஈமொஜிக்கள் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்ததக்கது.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();