Monday, 28 May 2018

சாதியை மையப்படுத்தும் படங்களில், கௌதம் கார்த்திக்..!


பிரபல இளம் நடிகர் மற்றும் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான, கௌதம் தற்பொழுது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம்வர துவங்கி இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' தரம் குறித்த கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் மாபெரும் வெற்றி அடைந்தது.


இதனை தொடர்ந்து தேவராட்டம் எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கௌதம் கார்த்திக். தந்தை கார்த்திக் போலவே, இவர் படங்களிலும் சாதியானது கொஞ்சம் கொஞ்சமாக எட்டி பார்க்க துவங்கியுள்ளது.

இதற்கு முன் வெளியான இவர் படத்திற்கு, 'முத்து ராமலிங்கம்' என பெயரிடப்பட்டிருந்ததை தொடர்ந்து, அடுத்ததாக 'கொம்பன் முத்தையா'வின் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கும், 'தேவராட்டம்' என பெயரிடப்பட்டதால், 'தன் படங்களில் சாதியின் அடையாளங்களை வைக்கிறாரோ கௌதம் கார்த்திக்?' என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.


ஏற்கனவே, சாதியை மையப்படுத்தி உருவான முத்து ராமலிங்கம் படம் கடுமையான விமரசனங்களை சந்தித்து பெரும் தோல்வி அடைந்தது, இதனை தொடர்ந்து 'மீண்டும் ஒரு சாதி திரைப்படமா' என்ற அதிர்ச்சியில் இருக்கின்றனர் கௌதம் கார்த்திக்கின் ரசிகர்கள்.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();