Breaking News

தமிழ் நடிகைகள் செய்ய தயங்கியதை, அசால்டாக செய்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' நாயகி



பிகினி, டாப்லெஸ் என வட இந்திய நாயகிகள் சர்வ சாதாரணமாக போட்டோக்களை வெளியிட்டு வரும் நிலையில், தென்னிந்தியாவில் நிலவும் பண்பாட்டு சூழ்நிலைகளினால், பெரும்பாலான தென்னிந்திய நாயகிகள் அவ்வாறு போஸ் கொடுப்பதை கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

அந்த அளவிற்கு ரசிப்பவர்களை விட, விமர்சிப்பவர்கள் இங்கே அதிகம் என்ற பயம் நாயகிகளுக்கு எப்பொழுதும் இருந்து வருகிறது. இந்நிலையில் அதைப் பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படமால் டாப்லெஸ் கவர்ச்சி போட்டோ சூட் ஒன்றினை நடத்தி இருக்கிறார், இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகி சந்திரிகா ரவி.


இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றாலும் ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவரான இவர், கவர்ச்சியாக நடிப்பதை பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கூட கவர்ச்சிப் பேயாக வலம்வந்திருந்த இவர், மேலும் பல படவாய்புகளுக்காக தனது கவர்ச்சிப் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

அவற்றில் ஒன்றாக வெளியாகி இருந்த இந்த டாப்லெஸ் புகைப்படம், அதிக அளவில் விமர்சனங்களை சந்தித்ததுடன், ஒரு சில கவர்ச்சிப் பிரியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.