Sunday, 27 May 2018

இரும்புத்திரையை அடுத்து, அர்ஜுன் வில்லனாக மிரட்டும் திரைப்படம்


தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை நாளுக்கு நாள் வேறுபட்டு வருகிறது. இதுவரை நாயகர்களை மட்டும் ரசித்து வந்த தமிழ் சினிமா ரசிகர்கள், தற்பொழுது அழுத்தமான கதாப்பாத்திரமாக இருந்தால் வில்லன்களையும் தலையில் வைத்து கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

உதாரணமாக சொல்ல வேண்டுமானால், மோகன் ராஜா இயக்கத்தில் உருவான தனிஒருவன் திரைப்படத்தில், வில்லன் அரவிந்த் சாமிக்கு கிடைத்த பாராட்டுகள், நாயகன் ஜெயம் ரவிக்கும் கிடைத்ததை விட அதிகம்.

இந்த வகையில், விஷால் நடிப்பில் அண்மையில் வெளிவந்த இரும்புத்திரை திரைப்படத்தில், ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்திருந்த 'வொயிட் டெவில்' எனும் கதாப்பாத்திரம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.


இதனால் அர்ஜுனுக்கு, அடுத்தடுத்து வில்லன் கதாப்பதிரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதாம். என்றாலும், இரும்புத்திரை போலவே, அழுத்தமான கதாப்பாத்திரதிற்காக காத்திருந்த அவர், விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் 'கொலைகாரன்' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றாரம்.

இது குறித்த தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் 'காளி' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், தற்பொழுது 'திமிரு புடிச்சவன்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து 'கொலைகாரன்' படத்தின் படபிடிப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#ArjunSaraj #villain #kolaikaran #VijayAntony
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();