Monday, 28 May 2018

நாயகர்களுடன் நெருக்கம் காட்ட தயங்கும் 'அனுஷ்கா'..! வெளியான உண்மை பின்னணி


தமிழ், தெலுங்கு சினிமா துறைகளில் முன்னனி நாயகியாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா.  ஆரம்ப காலகட்டத்தில் யோகா பயிற்சியாளராக இருந்த இவரே, இஞ்சி இடுப்பழகி படத்திற்கு போட்ட எடையை குறைக்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் இவர், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போல, தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பினை இழந்துவிட்டார்.

என்றாலும் பாகுபலி, பாகமதி போன்ற கதாப்பாத்திர முக்கியத்துவம் உள்ள கதைகள் இவரை தேடி சென்றுகொண்டுதான் இருக்கிறது. இதற்கிடையில் இதுவரை இல்லாத அளவிற்கு, 'நாயகர்களுடன் நெருக்கமாக நடிக்க மாட்டேன்' என புதிய கெடுபிடிகளை விதிக்க துவங்கி இருக்கிறாராம் அனுஷ்கா.


ஏற்கனவே 36 வயதாகி விட்டதாலும், கூடிய உடல் எடையால் வாய்ப்புகளும் குறைந்து வருவதாலும், திருமண வரன் தேடும் முயற்சியில் தீவிர மாக இறங்கியுள்ளனராம் அனுஷ்காவின் பெற்றோர்.

 இந்தாண்டுக்குள் திருமணத்திற்கு மாப்பிள்ளை ரெடி ஆகி விடுவார் என்ற நிலையில், நாயகர்களுடன் நெருக்கமாக நடிப்பது, தன் திருமணத்திற்கு தடையாகிவிடக்கூடாது என்ற காரணத்தினால்தான் அனுஷ்கா இந்த புதிய கெடுபிடிகள் விதிப்பதாக கிசுகிசுக்கிறது சினிமா வட்டாரம்.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();