Monday, 28 May 2018

'இப்படி ஆடை அணிவதற்கு சும்மாவே இருந்து விடலாமே..!' கவர்ச்சி உடையால் விமர்சனத்திற்கு ஆளான எமி


நாளுக்கு நாள் தொழில் நுட்பம் வளர்ந்து வருவதால், சினிமா துறையும் பயங்கர வேகத்தில் முன்னேறி வருகிறது. இதனால் ஹாலிவுட்டுக்கு இணையான தரத்தில், தமிழ் சினிமாவிலேயே படங்கள் உருவாக ஆரம்பித்துள்ளது. மேலும் தொழில் நுட்பத்தில் மட்டுமல்லாது, கவர்ச்சியிலும் ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கின்றனர் தமிழ் நடிகைகள்.

பிகினி, டாப்லெஸ் என முன்னாள் தமிழ் சினிமா நடிகைகளின் கெட்ட கனவாக இருந்த விசயங்களை சாதாரணமாக செய்யும் இளம் நடிகைகளின் மத்தியில், கவர்ச்சியில் ஒரு படிமேலே போய், மிரட்டி வருகிறார் எமி ஜாக்சன்.


லண்டனை சேர்ந்தவரான எமி ஜாக்சன், மதராசப் பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர், அதன் பிறகு பல இந்திய மொழிகளில் வாய்ப்புகள் கிடைத்து நடிக்க துவங்கிய இவர், அவ்வப்போது உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்களை, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். 

வழக்கம் போல இவர் வெளியிட்டிருக்கும் ஒரு புகைப்படம்தான் தற்பொழுது சர்ச்சைக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்கிறது. குறிப்பிட்ட புகைப்படத்தில் மெல்லிய துணியால் ஆன உடை ஒன்றினை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார் எமி.


கொடுமை என்னவென்றால், அவரின் உடல் பாகங்கள் அனைத்தும் அப்பட்டமாக, அந்த மெல்லிய உடையை தாண்டி தெரிகிறது. இந்த படுகவர்ச்சி புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் பலர், 'இதுக்கெதுக்கு நீங்க டிரெஸ் போடணும்' என விமர்சித்து வருகின்றனர்.   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();