Wednesday, 30 May 2018

எம்.ஜி.ஆர், ஜெமினிக்கு அடுத்து நான் ரசித்தது அஜித்தை தான் - நடிகர் ராஜேஷ்


சாதாரண மக்களிடமும், சினிமா பிரபலங்களிடமும் நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் ஏராளம். பெரிய பெரிய நடிகர், நடிகைகள் கூட அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வளம் வருவதை பார்த்திருப்போம். இந்நிலையில் 35 வருடங்கள் சினிமா துறையில், நல்ல நடிகனாக வளம் வரும் மூத்த நடிகர் ராஜேஷும், அஜித்தினை சமீபத்தில் புகழ்ந்திருக்கிறார்.

கடந்த 1974ம் ஆண்டு முதல் தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ராஜேஷ், இதுவரை 150 படங்களுக்கும் மேலே நடித்திருக்கிறார். நாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்த இவரை 80, 90 களில் வெளியான திரைப்படங்களில் பரவலாக பார்க்க முடிந்தது.


காதல் மன்னன் ஜெமினி கணேசனின் நெருங்கிய நண்பருமான இவர், சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், தற்போதைய சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்வியை எதிர் கொண்டார், அதற்கு 'பழம்பெரும் நடிகர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெமினி கணேசனை தொடந்து தான் ரசித்த நடிகர் என்றால் அது அஜித் தான்' என நடிப்பின் அடையாளங்களோடு ஒப்பிட்டு அவருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.     


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();