Breaking News

விஜய், சிவகார்த்திகேயன் ரசிகர்களால், கொண்டாட்டத்தில் மோகன் ராஜா


ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. ஆரம்ப காலகட்டத்தில் ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி வந்த இவர், தானே எழுதி இயக்கி இருந்த தனிஒருவன், வேலைக்காரன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே நடிகர் விஜயை வைத்து 'வேலாயுதம்' திரைப்படத்தினை இயக்கி இருந்த இவர், A.R. முருகதாஸ் படத்தினை தொடர்ந்து, விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.

அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், தனி ஒருவன் போன்ற திரைப்படத்தினை விஜய்க்கு கொடுக்கவேண்டுமென, அவரது ரசிகர்களும் தங்களது வேண்டுகோளை தெரிவித்து வருகின்றனர்.


இதனாலும், சிவகார்த்திகேயனின் 'காமெடி செய்யும் ஹீரோ' என்கிற இமேஜை உடைத்து, சீரியசான படங்களிலும் அவரால் நடிக்க முடியும் என்பதனை, தனது வேலைக்காரன் திரைப்படத்தில் நிரூபித்துக் காட்டியதாலும், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் ஆதரைவை அதிக அளவில் பெற்றிருக்கிறார் மோகன் ராஜா.

இந்நிலையில், சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடி இருந்த இவருக்கு, விஜய், சிவகார்த்திகேயன் ரசிகர்களின் வாழ்த்துக்கள் வந்து குவிந்திருக்கின்றன. அவர்களின் வாழ்த்திற்கு அண்மையில் நன்றி தெரிவித்திருந்த மோகன் ராஜா, தன் திரைப்பட வாழ்கையில் 'தனக்கு கிடைத்த பெரும் சொத்து நீங்கள்' எனவும் சந்தோஷத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.